சீனா மொபைல் உற்பத்தி நிறுவனமான oppo தனது அடுத்த தயாரிப்பை வெளிவிட்டு உள்ளது .இதற்கு oppo find x என்று பெயரிடப்பட்டு உள்ளது .
இந்த மொபைல் பார்ப்பதற்கு மிகவும் அழகான bezzel less வடிவமைப்பை கொண்டு உள்ளது ,
இதனுடைய முன் பதிவு பிளிப்கார்ட் வணிக தளத்தில் ஜூலை 25 ஆம் தேதியில் இருந்து துவங்குகிறது
விற்பனையானது ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதியில் இருந்து வரும் என்று கூறப்படுகிறது .
இதனுடைய விலை இந்திய ரூபாயின் மதிப்பு படி ரூபாய் 59,990,ஆக இருக்கும் .
இந்த மொபைலின் சிறப்பு அம்சம் 3D முக ஸ்கேனிங் அமைப்பை கொண்டு வடிவமைக்க பட்டு உள்ளது ,இது மற்ற விறல் பதிவு அம்சங்களை கொண்ட மொபைலை விட அதிக மடங்கு பாதுகாப்பானது என்று அந்த நிறுவனத்தில் கூறப்பட்டு உள்ளது .
மேலும் பின்புற கேமரா அமைப்பை முழுவதும் மூடும் ஒரு அமைப்பும் வடிவமைக்க பட்டு உள்ளது.
இதனுடைய திரை அமைப்பு 6.42 இன்ச் HD Amoled டிஸ்பிலே அமைப்பை கொண்டு உள்ளது ,அது மட்டும் இல்லாமல் 1080 x 2340 Resolution ஆக கூடிய வீடியோ ரெகார்ட் செய்யும் திறனும் கொண்டு உள்ளது ,இதனுடைய மொத்த எடை 186 கிராம் உள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளம் பொறுத்தமட்டில் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1
பயன்படுத்தப்பட்டு உள்ளது.
ப்ரோசிஸோர் அமைப்பை பார்க்கும் பொழுது கிவால்க்கோம் ஸ்னாப்ட்ராகன் 845 SOC ,பயன்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ளது .
இதனுடைய சிம் அமைப்பு டூயல் நானோ சிம் கொண்டு 4G சப்போர்ட் செய்யும் திறன் கொண்டு இருக்கிறது .
இதனுடைய RAM அமைப்பை பொறுத்த வரை 8 ஜிபி RAM அமைப்பையும் 256 ஜிபி உள்ளக சேமிப்பு திறனையும் கொண்டு உள்ளது .
இந்த மொபைல் டூயல் கேமரா அமைப்பை கொண்டு உள்ளது முதன்மை கேமரா அமைப்பு 20 மெகாபிஸேல் திறனும் ,இரண்டாவது கேமரா அமைப்பு 16 மெகாபிஸேல் திறனும்கொண்டு உள்ளது .
இதனுடைய பேட்டரி சேமிப்பு திறன் 3,400mAh திறனும்,Quick சார்ஜ் சிறப்பு அம்சமும் கொண்டு வடிவமைக்க பட்டு உள்ளது
வாசகர்களுக்கு நன்றி ,உங்கள் கருத்துகளை பதிவிடவும் ,உங்களுக்கு நமது பக்கத்தின் அனைத்து தகவல்களும் உடனுக்குடன் கிடைக்க subscribe செய்து கொள்ளவும் .