Topics covered
1.Types of memory cards
2.Memory card class
3.How to choose memory cards
Memory Cards அல்லது SD கார்டு என்று நாம் அனைவராலும் அழைக்கப்படும் வெளிப்புற சேமிப்பு நினைவு பெட்டகம் ,நம்முடைய மொபைல்களில் இன்று வரை நாம் பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம் .இந்த SD card என்பதன் பொருள் Secure Digital என்பது ஆகும் .
நீங்கள் ஆன்லைன் விற்பனை தளங்களில் பார்க்கும் பல Memory card களின் விலை மாறுபாடுகளுடன் காணப்படும்.ஆனால் சேமிப்பு திறன் ஒன்றாக இருக்கும் ,விலை மட்டும் மாறுபாடுடன் காணப்படும் ,இதற்கான காரணங்களை காணலாம் .
Types of memory cards
இந்த Memory card கள் முக்கியமாக மூன்று பிரிவுகளாக பிரிக்க படுகிறது .SD ,SDHC ,SDXC என்பவை தான் இதில் முக்கிய மூன்று பிரிவுகள் .
SD என்பது Secure Digital என்றும் ,SDHC என்பது Secure Digital High Capacity என்றும் ,SDXC என்பது Secure Digital extended Capacity என்றும் அழைக்க படுகிறது .
இந்த SD card என்பவை நீங்கள் உங்கள் மொபைலில் பயன்படுத்த படும் சாதாரண குறைவான சேமிப்பு திறன் கொண்ட சேமிப்பு பெட்டகங்களை உள்ளடக்கியது . இதனுடைய அளவு என்பது 128 MB இல் இருந்து 2 GB வரை தான் இந்தவகை மெமரிகார்டுகள் இருக்கும்.இந்த மெமரி கார்டு உடைய திறன் மிகவும் குறைவான அளவில் இருக்கும்.
இந்த SD card க்கு அடுத்து சற்று மேம்படுத்த பட்ட வகையில் SDHC வகை மெமரி கார்டுகள் அறிமுகப்படுத்த பட்டன .. இதனுடைய அளவு என்பது 4GB இல் இருந்து 32 GB வரை தான் இந்தவகை மெமரிகார்டுகள் இருக்கும்.இந்தவகை கார்டுகளில்ஒரு பிரத்தேயேக குறியீடு அச்சிடப்பட்டு இருக்கும் . claas Rating மற்றும் Speed என்பது குறிக்கப்பட்டு இருக்கும் ஒரு சிறிய வட்டம் மூலம் இவை குறிக்கப்பட்டு இருக்கும் .
Memory card class
இதில் Class 2,class 4,Class 6 மற்றும் Class 10 என்கிற 4 வகை class ஸ்பீட்கள் உள்ளன .இந்த class அனைத்துமே உங்கள் மொபைலுக்கு data transfer ஆக கூடிய வேகத்தை குறிக்கும் குறியீடுகள் .உதாரணமாக உங்கள் மொபைலில் 400 Mb கொண்ட வீடியோ பைலை நீங்கள் ஏற்ற வேண்டும் எனில், நீங்கள் பயன்படுத்தும் கார்டு ஆனது class 10 மெமரி கார்டாக இருந்தால் ,ஒரு செகண்டிற்கு 10 MB பைலை உங்கள் மொபைலுக்கு பரிமாற்றம் செய்யும்.
இந்த வகையில் மேலும் UHS அதாவது ultra High speed மெமரி கார்டு அறிமுகப்படுத்த பட்டது. இதன் குறியீடு U என்று போடப்பட்டு இருக்கும்.இதில் மேலும் Phase 1மற்றும் Phase 3 என்று பிரிக்கப்பட்டது .phase 1 ஆனது 50 mb per sec இல் இருந்து 100 mb வரை transfer செய்யும்.Phase 2 ஆனது 300 mb per sec வரை transfer செய்யும்.
மூன்றாவதாக இருக்கின்ற SDXC கார்டு வகைகள் 64Gb இல் இருந்து 2TB அதாவது 2000GB வரையிலான மெமரி கார்டுகளை கொண்டு உள்ளது .இந்த மெமரி கார்டுகளிலும் முன்பு சொன்ன அனைத்து class ஸ்பீட்களிலும் இருக்கிறது .
ஒரு அதிக திறன் உடைய மொபைலில் குறைந்த திறன் மெமரி கார்டு பயன்படுத்தும் பொழுது உங்களுக்கு வீடியோ திறக்கப்படும் நேரம் ,அது play ஆகின்ற டைம் மற்றும் performance ஆகியவை சரியான முறையில் இருக்காது .upto 8 Gb சப்போர்ட் என்று ஒரு மொபைலில் கொடுக்கப்பட்டு இருந்தால்,அந்த அளவு வரைக்கும் தான் உங்கள் மொபைல் எந்த தடை இல்லாம நன்றாக இயங்கும் என்பது அர்த்தம்.அதற்கு மேல் பயன்படுத்தும் பொழுது மொபைல் சரியா அந்த மெமரி கார்டை சப்போர்ட் செய்து இயங்காது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் .
இதனை பற்றிய தொகுப்பை வீடியோ வடிவில் காண வேண்டும் எனில் கீழ் உள்ள வீடியோ தொகுப்பை காணுங்கள் .
interesting….