Tech Story | Story of MI | Xiaomi வளர்ந்த கதை | தமிழில் | டெக் ஸ்டோரி பகுதி -1 |

            இன்று உலக அளவில் பல மொபைல் நிறுவனங்கள் தோன்றி கொண்டே இருக்கின்றன,இந்திய சந்தையில் ஒரு காலத்தில் சைனா மொபைல்  என்றால் அது தரம் குறைந்தது ,என்று அசுச்சுறுத்தும் நிலை மாறி ,இன்று அதையெல்லாம் தகர்த்து எறிந்து ஒரு தரமான மொபைலை உலக அளவில் அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கு உற்பத்தி செய்யும் நிறுவனம்  சியோமி  Xiaomi .


அனைவரையும் எதிர்பார்க்க வைத்து ,விற்பனை துவங்கிய சில மணி துளிகளில் அனைத்தும் விறு விறுவென விற்று வியக்க வைக்கும் இந்த நிறுவனத்தின் படைப்புக்கு சொந்தகாரர்  யார் ..?
சைனாவை சேர்ந்த  Lei Jun மற்றும் அவருடன் சேர்ந்து 7 நண்பர்களும் சேர்ந்து இதை துவக்கினார் .
1969 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்த lei jun ,தனது முதல் பயணத்தை 1992 ஆம் ஆண்டு king soft என்ற நிறுவனத்தின் என்ஜினீயர் ஆக பணியை துவக்கினார் .பின்பு 1998 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் CEO ஆக பதவியேற்றார்.
King soft நிறுவனத்தின் சேவை என்பது , இன்டர்நெட் செக்யூரிட்டி ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் மற்றும் WPS ( Word  Processing System ) அதாவது இப்பொழுது பயன் படுத்த படும் Microsoft Office போன்ற ஒரு Office Suite ,இது போன்று software  மற்றும் இன்டர்நெட் சம்மந்தமான சேவைகளை வழங்குவது  இந்த King soft நிறுவனம்.
 பின்பு 2000 ஆம் ஆண்டு Joyo .com என்ற ஆன்லைன் புக் ஸ்டார் ஒன்றை உருவாக்கினார் ,மிகவும் பிரபலம் அடைந்த இந்த ஸ்டார்ஐ  2004 ஆம் வருடம் அமேசான் நிறுவனம் 75 மில்லியன்  அமெரிக்கன் டாலருக்கு வாங்கியது .
பின்பு 2008 ஆம் ஆண்டு UC web உடைய chairmen ஆக பணியாற்றினார் .
பின்பு மொபைல் சந்தையில் கால்பதிக்க நினைத்த இவர் முதல் சியோமி MI மொபைலை ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியிட்டார் ,இதற்காக பல நிறுவனங்கள் தன்னுடைய முதலீடுகளை அந்த சியோமி நிறுவனத்தில் முதலீடு செய்தது .
இந்த மொபைல் வெளியிட்ட 34 மணி நேரத்தில் 3 லட்சம் பேர் இதை புக் செய்தனர் .
தனது அடுத்த மொபைலை ஆகஸ்ட் 2012 ஆம் ஆண்டில்,
 MI 2 மொபைலை அறிமுக படுத்தியது  சியோமி நிறுவனம் .
இந்த மொபைல் பெரும் வரவேற்பை பெற்று 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் 10 மில்லியன் மொபைலை விற்று சாதனை நிகழ்த்தியது ,
அதன் பிறகு தனது அடுத்த படைப்பை வெளியிட திட்டமிட்ட சியோமி நிறுவனம் 47 இன்ச் 3D  திறன் கொண்ட  ஸ்மார்ட் டிவியை ,சோனி டிவி தயாரிப்பு நிறுவனமான wistron corporation உடன் இனைந்து இந்த டிவியை தயாரித்து வெளியிட்டது , 
இதன் பிறகு 2013 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் MI 3 மொபைலை அறிமுகப்படுத்தியது ,
இந்த அசுர வளர்ச்சியை மேற்கொண்ட சியோமி நிறுவனம் சைனாவின் 5 வது மொபைல் உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்தது ,பிறகு பெய்ஜிங் மாநகரில் தனது முதல் சேவை மையத்தை துவங்கியது ,2013 ஆண்டின் இறுதியில் 18 மில்லியன் மொபைல் போன்களை விற்று தீர்த்தது .
பிறகு 2014 ஆம் ஆண்டு தனது சர்வதேச தலைமை இடத்தை சிங்கப்பூரில் நிறுவியது ,பிறகு இதனுடைய கிளைககள் இந்தியா ,ரஷ்யா ,இந்தோனேசியா ,பிரேசில் போன்ற பல நாடுகளில் அடுத்தடுத்து நிறுவப்பட்டது ,
பிப்ரவரி 21 ல் சியோமி ரெட்மியை சிங்கப்பூரில் வெளியிட்டது ,பிறகு தனது நிறுவனத்தின் வலைதளத்தின் பெயரான xiaomi .com இல் இருந்து , 3.6 மில்லியன் அமெரிக்கன் டாலருக்கு mi .com என்ற domain பெயரை பதிவு செய்தது.
பிறகு 2015 ஆம் வருடம் இந்தியாவில் கால் பதித்த mi நிறுவனம் இந்திய  வணிக வலைத்தளங்களில் கிடைக்கும்படி 2015 இல் mi 4 மொபைலை மற்ற இடங்களில் அறிமுகப்படுத்தாமல் முதல் முறையாக இந்தியாவில் அறிமுக படுத்தியது ,
அடுத்த 2 வருடங்களில் MI 5,ரெட்மி நோட் 3,MI MAX ,MI 6,MI MAX 2,MI 5X MI A 1,மற்றும் MI MIX 2 என்று வரிசையாக அடுத்து அடுத்து வரிசையாக மற்ற மொபைல் நிறுவங்களுக்கு சவாலான பல வசதிகளுகளுடன் களம் இறக்கியது ,
2018 ஆம் வருடத்தில் ரெட்மி Y 2,ரெட்மி 5,ரெட்மி நோட் 5,ரெட்மி max prime ,ரெட்மி நோட் 5 Pro என்று தனது படைப்புகளை வெளி விட்டது ,இதற்கிடையில் இந்தியாவின் இப்போதைய முதன்மை தொலை தொடர்பு நிறுவனமான ஜியோ உடன் இனைந்து பல அட்டகாசமான ஆபர்களை அள்ளி கொடுத்து தன் வசம் மேலும் வாடிக்கையாளர்களை ஈர்த்து கொண்டு இருக்கிறது இந்த நிறுவனம் .

இந்த நிறுவனம் மொபைல் மட்டும் இல்லாது ,இயர் போன்ஸ்  ,மினி ஸ்பீக்கர் ,ஸ்மார்ட் டிவி ,எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ,ஏர் ப்யூரி பையர் ,mi பேண்டு ,mi ட்ரொன் ,மற்றும் பவர் பேங்க் ஆகிய எலக்ட்ரானிக் சாதனங்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது .
இனி வரும் காலங்களில் இந்த நிறுவனத்துடைய அனைத்து படைப்புகளும் விற்பனைக்கு இந்தியாவில் வரும் என்று எதிர்பார்க்க படுகிறது  , வரும் காலங்களை வளர்ந்து வரும் பெரும் நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த நிறுவனம் நிலைத்து நின்று சாதிக்குமா உங்களுடன் நானும் சேர்ந்து பார்த்து அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் ..
நன்றி  அடுத்த பதிவில் சந்திப்போம் .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *