useful Gmail settings,Tips and Tricks 2018|உபயோகம் உள்ள ஜிமெயில் செட்டிங்ஸ் மற்றும் டிப்ஸ்

உபயோகம் உள்ள ஜிமெயில் செட்டிங்ஸ் மற்றும் டிப்ஸ்
முன்னுரை

இன்றைய உலகில் ஜிமெயில் பயன்பாடு என்பது ஒரு முக்கியமான அம்சமாகும். ஈமெயிலை கண்டுபிடித்தது ஒரு தமிழன் என்பதில் மேலும் ஒரு பெருமிதம் .எந்த ஒரு ஆண்ட்ராய்டு பயனர்களாக இருந்தாலும் இந்த ஜிமெயில் தரவு என்பது ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. பலதரப்பட்ட கணக்குகளுக்கு இந்த ஈமெயில் தரவு பயன்படுத்த படுகிறது .இந்த ஈமெயில் கணக்குக்குளின் சேவையை வழங்குவதில்   yahoo ,Google ,Microsoft ,போன்ற நிறுவனங்கள்  பிரபலம் ஆனவை .இதில் அதிகமாக அனைவரும் பயன்படுத்துவது கூகிளின் ஜிமெயில் கணக்கு .இந்த ஜிமெயில் பயனர்களுக்கு ஏற்ற வகையில் கூகிள் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட சில மாற்றங்களைஇந்த ஆண்டு  அளித்துள்ளது அதனை பற்றி கீழே காண்போம் . 

புதிய ஜிமெயில் லுக்

இந்த புதிய லுக் கொண்ட ஜிமெயில் ஏற்கனவே உள்ள ஜிமெயில் அக்கௌன்ட்டில் உங்களுக்கான பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது .இதனை நீங்கள் பெற விரும்பினால் உங்கள் ஜிமெயில் கணக்கில் உள் நுழைந்தவுடன் படத்தில் காட்டப்பட்டு உள்ளது போல் settings கியர் ஐகான் ஒன்று இருக்கும் அதை கிளிக் செய்து Try the new gmail என்ற option இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் உங்களுக்கான புதிய திரை தோன்றும் .புதிய  ஜிமெயிலில்  உங்களுக்கு பக்கவாட்டில் காலெண்டர் ,Google keep ,task ஆகிய மூன்று அம்சங்கள் தோன்றும் அது மட்டும் இல்லாமல் உங்களுக்கான புதிய டிசைன் திரை தோன்றும் .

குறிப்பிட்ட ஈமெயில் தரவுகளை நீக்க

தினம் தினம் நூறுக்கு மேற்பட்ட ஈமெயில்தரவுகள்  உங்கள் மெயில் Inbox இல் குவிந்த வண்ணம் இருக்கும். அவற்றில் சில மட்டுமே உங்களுக்கானா உபயோகம் உள்ளனவாக இருக்கும்,இவற்றில்  நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு குறிப்பிட்ட ஈமெயில் முகவரியில் இருந்து வரும் மெயில்களை மொத்தமாக நீக்க விரும்பினால் அதற்கான வழிமுறையை காண்போம் .

உதராணமாக நான் என் ஈமெயிலில் உள்ள ஷாப்பிங் இணையதளமான பிளிப்கார்ட்டில் இருந்து வந்துள்ள அனைத்து மெசேஜ்களை டெலீட் செய்ய விரும்பினால் மேலே உள்ள search  பாக்ஸில் பிளிப்கார்ட் என்று டைப் செய்து search செய்தவுடன் பிளிப்கார்ட் சம்மந்தமான அனைத்து ஈமெயில் வரும் ,வந்தவுடன் select all கொடுத்து delete செய்வதன் மூலம் அந்த ஈமெயில்கள் மட்டும் delete ஆகும் .இது போன்று ஒரு நபரின் ஈமெயில் முகவரியை search பாக்ஸில் டைப் செய்து அவர்களுடைய ஈமெயில்களை மட்டும் நீக்கி கொள்ளலாம் .

Custom keyboard short cut(கீ போர்டு ஷார்ட்கட் )

நீங்கள் ஜிமெயிலை டெஸ்க்டாப் அல்லது மடிக்கணினி போன்றவற்றில் பயன்படுத்தும் பொழுது இந்த செட்டிங் ஆனது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்  ,உங்கள்  விசைப்பலகையில் நீங்கள் உங்களுக்கு ஏற்றவாறு நீங்கள் எளிமையான முறையில் உங்கள் ஜிமெயிலை கையாளுவதற்கு இது உதவியாக உள்ளது .உதாரணமாக நீங்கள் ஒரு புதிய மெயில் ஒன்றை அனுப்புவதற்கு Compose என்ற பகுதியை சென்று கிளிக் செய்து பின்பு புதிய மெயில் அனுப்ப வேண்டும் ,இந்த keyboard shortcut செட்டிங்ஐ on  செய்வதால் உங்கள் keyboard இல் C என்று விசைப்பலகையில்  தட்டச்சு  செய்தால் Compose mail பகுதி உங்களுக்கு திரையில் தோன்றும் .இது போன்று அதிகமான shortcut option இங்கு கொடுக்கப்பட்டு உள்ளது .

அதை on செய்வதற்கு நீங்கள் setting பகுதிக்கு சென்று அங்கு advance setting என்ற பகுதிக்கு சென்று custom keyboard shortcut என்பதை enable செய்ய வேண்டும் .

பிறகு general settings பகுதியில் custom keyboard shortcut பகுதியை on செய்து save  changes  கொடுத்து வெளி சென்று நீங்கள் பயன்படுத்த ஆரம்பிக்கலாம் .

undo Send (அனுப்பிய மெயிலை திரும்ப பெற )

இப்பொழுது உதாரணமாக ஒருவருக்கு நீங்கள் மெயில் send செய்து விட்டீர்கள் .அதில் ஏதோ ஒன்று தவறுதலாகவோ இல்லை அனுப்ப வேண்டிய அட்டாச்மெண்ட் தவறி அனுப்பிவிட்டாலோ அந்த மெயில் அவருக்கு சென்று அடையாமல் திரும்ப பெரும் வசதியை  கொண்டு உள்ளது.இது அனுப்பிய அரை நிமிடம் மட்டுமே, உங்களுக்கான அதிகபட்ச நேரம் ஆகும். அதற்குள் நீங்கள் அந்த மெயிலை திரும்ப பெறலாம் .அதாவது 30 வினாடி துளிகள் .இதற்கான setting  இல் general setting பகுதியில் undo send என்ற பகுதியை கிளிக் செய்து அதிகபட்சமான 30 வினாடி துளிகளை வைத்து கொண்டு உபயோகிக்கலாம் .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *