Xiaomi Mi A2 price and full specification ,Mi A2 மொபைலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றிய தகவல்

Mi A2 மொபைலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றிய தகவல்

      சியோமி  நிறுவனம் ஏற்கனவே Mi A1 மொபைலின் வெற்றியைத் தொடர்ந்து MI A2 மொபைலை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்துகிறது.

 

புறத்தோற்றம்

இந்த மொபைல் ஆனது மூன்று வண்ணங்களில் வெளிவருகிறது கோல்ட்,ப்ளூ மற்றும் கருமை  ஆகிய நிறங்களில் இந்த மொபைலின் தோற்றமானது உருவாக்கப்பட்டுள்ளது.
மிகவும் மெலிதான தோற்றத்தை கொண்ட இந்த மொபைல் ஆனது 168 கிராம் எடைகொண்ட மொபைலாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்புறத்தில் 2 கேமரா பொருத்தப்பட்டுள்ளது .
இந்த இரண்டு கேமராவிற்கு இடையில் எல்இடி பிளாஷ்லைட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு கேமரா அமைப்பானது அதனுடைய பின்புற தளத்தில் இருந்து சற்று கொஞ்சம் உயரமாக வைக்கப்பட்டுள்ளது.

இதன் திரை அமைப்பைப் பொறுத்து மட்டில்  5.9  இன்ச்  ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் முழுவதும் மெட்டல் பாடி டிசைன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது ,அதுமட்டுமில்லாமல் இதனுடைய டிஸ்ப்ளே அமைப்பானது கொரில்லா கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் சிறந்த தொடுதிரை அமைப்பின் அம்சத்தை அனுபவிக்கலாம்.

கேமரா அமைப்பு

இதில் முதன்மை கேமரா 20 மெகாபிக்சல் கொண்டதாகவும் இரண்டாம் நிலை கேமரா 2 மெகா பிக்சல் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.முன்புற கேமரா அமைப்பை பொருத்தமட்டில் 20 மெகாபிக்சல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஃப்ரெண்ட் கேமராவில் பியூட்டி Mode,HDR,selfie Timer,Face recognition, Group selfie ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ ரெக்கார்டிங் பொருத்தமட்டில் 4k வீடியோ ரெக்கார்ட் செய்யும் தன்மை கொண்டுள்ளது.

பின்புற கேமரா பொறுத்தமட்டில் கேமரா படங்களை மேம்படுத்துவதற்காக Background blur camera Mode,light enhancement,Burst mode,panorama Mode,single color splash,ஆகிய வசதிகள் பொருத்தப்பட்டு உள்ளது 

செயல்பாடு மற்றும் அம்சங்கள்

RAM  அமைப்புகளிலும் வேறுபாடுகள் கொண்டு இந்த மொபைல் தயாரிக்கப்பட்டு  உள்ளது 4GB ரேம் 32 GB மற்றும் 64 GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகிய அமைப்புகளுடனும்
மற்றொரு மொபைல் 6 GB மற்றும் 128 GB இன்டர்நெல் ஸ்டாராஜ் கொண்டதாகவும் உள்ளது .

6 GB RAM கொண்ட மொபைல் இன்னும் சில நாட்களுக்கு பிறகு விற்பனைக்கு வருகிறது.
ப்ரோஸெசோர் அமைப்பை பொறுத்த மட்டில் Qualcomm snapdragaon 660AIE பொருத்தப்பட்டு உள்ளது.
டூயல் நானோ சிம் பயனப்டுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு Oreo  8.1 பயன்படுத்தப்பட்டு உள்ளது .
பேட்டரி சேமிப்புத் திறனானது 3010 mah கொண்டு உள்ளது ,இது ஒரு Non Removable பேட்டரி ஆகும் ,மற்றும் quick Charge வசதியும் இதில் இடம்பெற்று உள்ளது .
சென்சார்களை பார்க்கும் பொழுது Accelerometer sensor ,Gyroscope sensor ,Fingerprint sensor ,Light  sensor ,proximity  sensor ,Hall Sensor ஆகியவை பொருத்தப்பட்டு உள்ளது .3.5 mm ஆடியோஜாக் கொண்டு உள்ளது ,ப்ளூடூத் வெர்சின் 5.0 பயன்படுத்த பட்டு உள்ளது ,பிங்கர் பிரிண்ட் சென்சார் அமைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது .

விலை மற்றும் சலுகைகள்

.இந்த மொபைல் ஆனது அமேசான் இணையதளத்திழும் Mi இணையதளத்திலும் புக் செய்து கொள்ளலாம் .இதனுடைய  விலை  இந்திய ரூபாயின் மதிப்பின் படி 16,999 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது .

இந்த மொபைலின் விற்பனை ஆகஸ்ட் 9 இல் 12 மணி இருந்து இதன் புக்கிங் அமேசான் மற்றும் mi இணையதளத்தில் துவங்குகிறது .
இதனுடைய official Partner  ஆன ஜியோவுடன் இனைந்து பல சலுகைகளை தருகிறது 2000 வரையிலான cashback ஆபர் தருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *