xiaomi poco F1 Finally launched in India at ₹ 20,999|Full specifications|Xiaomi Poco F1 அறிமுக விலை மற்றும் முழு தகவல்கள் தமிழில்|

இந்தியாவில் அறிமுக விலை மற்றும் சலுகைகள்

Xiaomi நிறுவனம் பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த Xiaomi Poco F 1 மொபைலை அறிமுகப்படுத்தி உள்ளது .இந்த மொபைலின் RAM அளவுகளை பொறுத்து மூன்று விலை வேறுபாடுகளை  கொண்டு களம் இறங்குகிறது .6GB RAM மற்றும் 64GB இன்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட மொபைல் ரூபாய் 20,999 ஆகவும் ,6GB RAM மற்றும் 128GB இன்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட மொபைல் ரூபாய் 28,999 ஆகவும் ,8GB RAM மற்றும்      256GB இன்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட மொபைல் ரூபாய் 29,999 ஆகவும் ,நிர்ணயிக்க பட்டு உள்ளது .இந்த மொபைலின் விற்பனை ஆகஸ்ட் மாதம்  29 ஆம் தேதியில்  12 மணியில் இருந்து துவங்குகிறது .HDFC வாடிக்கையாளர்களுக்கு அறிமுக சலுகையாக 1000 ரூபாய் தள்ளுபடியும் மற்றும் ஜியோ நெட்ஒர்க் உடன் இனைந்து 6 TB டேட்டாவை அறிமுக சலுகையை சலுகையாக வழங்குகிறது .

புறத்தோற்றம்

இந்த மொபைல் ஆனது நான்கு  வண்ணங்களில் உருவாக்கப்பட்டு உள்ளது ,அவை Graphite black ,Steel Blue ,Rosso Red மற்றும் Armour Edition. இந்த மொபைலின் மொத்த எடை 182 கிராம் ஆக உள்ளது ,Armour Edition உடைய எடை சற்று கூடுதலாக 187 கிராம் ஆக உள்ளது .இதில் டிஸ்பிலே அமைப்பு 6.18 இன்ச் ஆக உள்ளது ,இந்த திரை கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்க பட்டு உள்ளது ,பின்புறம் டூயல் கேமரா அமைப்பு மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார் அமைப்பு ஆகியவை பொருத்தப்பட்டு உள்ளது ,முன்புறத்தில் டிஸ்பிலே பகுதியில்   மேல் மற்றும் கீழ் புறத்தில் சிறு பெசல் அமைப்பு வடிவமைக்க பட்டு உள்ளது .

ப்ரொசிஸோர் , மெமரி மற்றும் கனெக்ட்டிவிட்டி

ஏற்கனவே மேலே  கூறப்பட்டது போல மூன்று ரேம் அமைப்புகளை கொண்டு வேறுபடுகிறது அவை  6GB +64GB /6GB +128G/8GB +256GB,ப்ரொசிஸோர் பொறுத்தவரையில்  Qualcomm snapdragon 845 liquid Cool Technology  கொண்டு இயங்குகிறது .இந்த liquid Cool டெக்னாலஜி உங்கள் மொபைல் கேமிங் போன்றவற்றை கையாளும் பொழுது அதிகமாக வெப்பமடையாமல் தடுக்கும் .512 GB வரையிலான எஸ்ட்டெர்நெல் மெமரியை சப்போர்ட் செய்யும் தன்மை கொண்டது . டூயல் 4G சிம்கார்டு சப்போர்ட் செய்யும் தன்மை கொண்டு உள்ளது .மேலும் wifi ,USB type -C ,3.5 mm ஆடியோ ஜாக் ஆகியவை கொண்டு உள்ளது.  ஆண்ட்ராய்டு வெர்சின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 ஆகும் மேலும் ஆண்ட்ராய்டு p  அப்டேட் பெரும் வகையில் உருவாக்க பட்டு உள்ளது .

கேமரா அமைப்பு

கேமரா அமைப்பு  பின்புறத்தில் டூயல் கேமரா அமைப்பு கொண்டதாக செங்குத்தாக கொடுக்கப்பட்டு உள்ளது ,இதில் இரண்டு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது ,இதில் முதன்மை கேமரா 12 மெகாபிஸேல் கொண்டதாகவும் ,இரண்டாம் நிலை கேமரா 5 மெகாபிஸேல் கொண்டதகாகவும் ,முன்புற கேமரா 20 மெகாபிஸேல் கொண்டதாகவும் உள்ளது .இந்த கேமரா அமைப்புகளில் உங்கள் வசதிக்கு ஏற்றவாறு உங்கள் போட்டோக்களை மெருகூட்ட  பல சிறப்பு தோற்ற வசதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டு உள்ளது .4K வீடியோ ரெகார்ட் சப்போர்ட் உள்ளது மற்றும் Face Unlock வசதியை உள்ளடக்கி உள்ளது .

பேட்டரி மற்றும் சென்சார்

பேட்டரி பேக்கப் பொறுத்தவரையில் 4000 mah கொண்டு உள்ளது .quick charge 3.0 சப்போர்ட் ,கொண்டு உள்ளது .சென்சார்களை பார்க்கும் பொழுது ,proximity sensor,E-compass,Gyroscope,Ambient Light Sensor மற்றும் Hall sensor ஆகியவை பொருத்தப்பட்டு உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *