இன்று நாம் இந்த பதிவில் அனைவரும் பயன்படுத்த கூடிய மிகவும் எளிமையான 3 Graphic Design வலைத்தளங்களை பற்றி பார்க்க இருக்கிறோம் .
இன்று பல நிறுவங்கள் இதற்கான சேவையை குறிப்பிட்ட அளவில் பணம் பெற்றுக்கொண்டு அதற்கான டிசைன்களை வடிவமைத்து தருகின்றன.
குறு நிறுவங்களின் விளம்பரங்கள் ,கடைகள் பற்றிய போஸ்டர்கள் ,மற்றும் Facebook பக்கங்கள் இது போன்று பல இடங்களில் இந்த கிராபிக் டிசைன்களை விளம்பர படுத்த நீங்கள் வேறு ஒருவரை அனுக வேண்டிய அவசியம் இல்லை.
நீங்களே உங்களுக்கு தேவையான போஸ்டர்களை முற்றிலும் இலவசமா எளிமையான முறையில் வடிவமைத்து கொள்ள இந்த வலைதளங்கள் பயன்படுகின்றன .
முதல் முதலாக நாம் பார்க்க இருக்கும் வலைதளத்தின் பெயர்
1. # Canva
இந்த வலைத்தளம் அதிகமான உள் வசதிகளை உள்ளடக்கி உள்ளது.
உங்களுக்கு தேவையான அனைத்து விதமான கிராபிக் போஸ்டர்களையும் மிக எளிமையான முறையில் நீங்களே வடிமைத்து கொள்ளலாம்
,முகப்பு பக்கத்தில் உள் நுழைவதற்கு ஒரு சிறிய பதிவு செய்து கொண்டு நீங்கள் உங்கள் விருப்பமான டிசைன்களை வடிவமைக்க ஆரம்பிக்கலாம் .
உங்களுடைய மெயில் மற்றும் பாதுகாப்பு கடவுச்சொல்லை உருவாக்கி கொண்டு உள் நுழைந்து உங்களால் வடிமைக்க முடியும் .
முகப்பு பக்கத்தில் ஏற்கனவே பலதரப்பட்ட பிரிவுகளில் பேனர் சைஸ் உருவாக்கி வைக்க பட்டு இருக்கும்அதில் உங்களுக்கு தேவையான அளவு பேனர் அதை எடுத்து உருவாக்கி கொள்ளலாம் இல்லை மேலே dimension என்ற பிரிவு இருக்கும்
மேலே காட்டப்பட்ட படத்தில் உள்ளது போல் இடது கை பக்கத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து டூல்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கும் இதை கிளிக் செய்து விட்டு Drag செய்து உங்கள் போஸ்டரில் சொருகி எடிட் செய்து கொள்ளலாம் .
2.இரண்டாவதாக நாம் பார்க்கும் வலைதளத்தின் பெயர்
#Crello
இதுவும் மேலே கூறப்பட்டு உள்ள வலைத்தளத்தை போன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட டிசைன் இமேஜஸ்ஐ கொண்டு உள்ளது.social மீடியா போஸ்டர்களுக்கு மிக சிறந்த டிசைனிங் வலைத்தளம் ஆகும் .
அனிமேஷன் டிசைன் வசதியும் கொண்டு உள்ளது .நீங்கள் சுயமாக புத்தகம் போன்றவை எழுதினாலும் ,அதற்கு வெளியில் கொடுத்து டிசைன் பன்ன வேண்டிய அவசியம் இல்லை இந்த வலைத்தளத்திலேயே நீங்கள் உங்கள் படைப்புக்கான கவர் பக்கத்தை உருவாக்க முடியும் .
3.அடுத்து நாம் பார்க்க இருப்பது
# Piktochart
இந்த வலைத்தளமும் உங்களுக்கு தேவையான அனைத்து டிசைன் template உள்ளடக்கியுள்ளது .உங்கள் கூகுல் கணக்கு மூலம் நீங்கள் உள் சென்று தேவையானவற்றை எடிட் செய்து கொள்ளலாம் ,தொழிற்சாலைகள் ,அலுவலகங்கள் போன்றவற்றில் அற்புதமான ப்ரெசென்ட்டேஷன்ஸ்களை கிராபிக் வடிவில் நீங்கள் கொடுக்க விரும்பினால் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம் .இதில் மிகவும் மேம்படுத்தப்பட்ட டிசைன் டூல்ஸ் சில குறிப்பிட்ட விலை அளவுகளில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன .தேவை என்றால் நீங்கள் கட்டணம் செலுத்தி பயன்படுத்தி கொள்ளலாம் ,இருப்பினும் இலவசமாக நிறைய டிசைன்களையும் இந்த வலைத்தளம் கொண்டு உள்ளது .
இந்த தகவல் அனைத்தும் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவருக்கும் பகிர்ந்து பயனடைய விரும்புகிறோம்
நமது பக்கத்தின் அனைத்து படைப்புகளையும் நீங்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வலைதளத்தை subscribe செய்து கொள்ளவும் .
நன்றி அடுத்த பதிவில் சந்திப்போம் .