உபயோகம் உள்ள இணையதளங்கள் பகுதி-3 | useful websites part-3| Tamil |

உபயோகம் உள்ள இணையதளங்கள் பகுதி-3 | useful websites part-3| Tamil |

இந்த பதிவில் நாம் பார்க்கும்  இணையதளம்

1.typing.com #


இந்த இணையதளம் உங்களுக்கு இலவசமாக நீங்கள் டைப்பிங் கற்றுக்கொள்ள உதவுகுகிறது.இன்று நாம் டைப்பிங் கற்றுக்கொள்ள வேண்டுமெனில் வெளியில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து சில குறிப்பிட்ட தொகை செலுத்தி அதை பயில வேண்டும் .அனால் இந்த இணையதளம் அதற்கான சேவையை இலவசமாக வழங்குகிறது.படிப்படியாக எந்த விறல் பயன்படுத்த வேண்டும் எந்த எந்த எழுத்துக்களுக்கு எந்த முறையில் எந்த விரல்களை கொண்டு டைப் செய்ய வேண்டும் என்று முழு செயல்முறையும் கொடுக்க பட்டு உள்ளது அதன் பிறகு நீங்கள் டைப் செய்தால் அந்த முறை சரியானதாக இருந்தால் அடுத்த வகுப்பிற்கு நுழையும் இதுபோன்று முழுவதும் கொடுக்கப்பட்டு உள்ளது .நீங்கள் வெளியில் ஏதேனும் வகுப்பு சென்றால் சில சமயங்களில் உங்களுக்கு சரியான நேரத்தில் அங்கு சென்று பயில இயலாது .அனால் இந்த இணையதளம் மூலம் நீங்கள் உங்கள் விருப்பற்றத்திற்கு ஏற்றவாறு உங்கள் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு ஏற்ற நேரத்தில் கற்றுக்கொள்ளலாம் .

அடுத்து நாம் பார்க்கும் இணையதளம் 

2.videos.pexels.com #

     இந்த இணையதளம்  வீடியோவுக்கான பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட வலை தளம் ஆகும். இந்த இணையதளத்தில் முழு ஹெச்டி தரத்துடன் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
 இந்த வலைத்தளத்தில் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு பிரிவுகளாக வீடியோக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக நீங்கள் சமையல் தொடர்பான ஒரு வீடியோவை உருவாக்க விரும்பகிறீர்  என்றால் அதற்கு சமமான வீடியோ ஹெச்டி தரத்துடன் இங்கு இலவசமாக கொடுக்கப்படுகின்றன .
சில குறிப்பிட்ட வலைத்தளங்கள் இதற்காக சில குறிப்பிட்ட  அளவு விலை பெற்றுக்கொண்டு பின்பு  வீடியோக்களை  பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கின்றன. ஆனால் இது முழுக்க முழுக்க இலவசமான ஒரு இணையதளம் ஆகும். அது மட்டுமில்லாமல் ஒரு விடீயோவின்  பேக்ரவுண்ட் போன்றவற்றில் நீங்கள் பயன்  படுத்த வேண்டும் என்றால் இந்த வீடியோக்களை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.எந்த ஒரு copyright பிரச்சனைகளும் வராது .
அடுத்து நாம் பார்க்க இருக்கும் இணையதளம்

3.fonts.google.com #


இந்த இணையதளம் நமக்கு பல அழகிய வடிவிலான பல ஸ்டைல்களில் எழுத்துக்களை அளிக்கிறது. நாம் பல இடங்களில் பார்த்திருப்போம் பல போஸ்டர்களில் அழகிய வடிவங்களில் சில எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருக்கும் .அந்த மாதிரியான எழுத்துக்களை நீங்களே இலவசமாக உருவாக்க வேண்டும் என்றால் இந்த வலைதளம் அதற்காக உதவுகிறது. உங்களுக்கு எந்த வடிவிலான எழுத்துக்கள் வேண்டும்  என்று நீங்கள் முடிவு செய்து கொண்டு பிறகு அந்த எழுத்து தொகுப்பு மேல் கிளிக் செய்தால் அடுத்த பகுதி உங்களது திரையில் தோன்றும் இதில் web designing போன்றவற்றை செய்வோருக்கும் இதற்காக பிரத்யேகமாக ஒரு கோடு ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதை காப்பி செய்து உங்கள் வலைதளத்தில் பேஸ்ட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். சாதாரணமாக பயன்படுத்துவோருக்கு மேலே பதிவிறக்கம் செய்யும் சிம்பல் கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்தால் zip file ஆக டவுன்லோட் ஆகும். பின்பு அதை நீங்கள் எந்த சாப்ட்வேரில் உபயோக படுத்த  விரும்புகிறீர்களோ அதில் பேஸ்ட் செய்து பின்பு அதை பயன்படுத்திக் கொள்ளலாம். சில வலைத்தளங்கள் குறிப்பிட்ட அளவில் பணம் பெற்றுக் கொண்டு இந்த எழுத்துக்களை விற்பனை செய்கிறது ஆனால் இந்த வலைதளத்தில் முழுக்க முழுக்க இது இலவசமாக ஒன்றாகும் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அடுத்து நாம் பார்க்க இருக்கும் இணையதளம்

4.googleartproject.com

இந்த இணையதள சேவை நீங்கள் உலகின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பற்றிய தகவல் மற்றும் அந்த இடங்களை இருந்த இடத்தில இருந்தே பார்க்க வேண்டுமா ,ஆம் அதற்கான சேவையை தான் இது வழங்குகிறது உலகின் பல நாகரீக தோன்றலை பற்றிய படங்கள்,மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களின்  அரிதான புகைபடங்கள் ,மற்றும் மியூசியம் போன்றவற்றை முழுவதுமாக 360 முறையில் பார்க்கும் வகையில்  உருவாக்கப்பட்ட காட்சி கோப்புகளை கொன்டு உள்ளது. அதன் மூலமாக அந்த இடத்தை இருந்த இடத்தில் இருந்து கொண்டே பார்த்து ரசிக்கலாம்.அதுமட்டும் இல்லாமல் Neraby என்ற ஒரு option கொடுக்கப்பட்டு உள்ளது ,அதை தேர்ந்தெடுக்கும் பொழுது உங்களுக்கு அருகில் உள்ள புகழ் பெற்ற இடங்களை பற்றிய தகவல்கள் அனைத்தும் .உதாரணமாக Thanjavur bragatheeswarar temple என்று சர்ச் பகுதியில் சர்ச் செய்தால் அந்த கோவிலின் உள் பகுதிக்கு செல்லும் பிறகு நடைபாதையில் ஒரு அம்புக்குறி காட்டும் ,அதை கிளிக் செய்யும்பொழுது அந்த பகுதிக்கு நீங்கள் சென்று உள் நின்று 360 முறையில் முழுவதுமாக பார்க்கலாம் கோவிலை ஜூம் செய்தும் பார்க்கலாம் முழுவதுமாக கோவிலை இருந்த இடத்தில இருந்து கொண்டே முழுவதையும் சுற்றிப்பார்க்க இயலும் .உங்களுக்கு பிடித்த இடங்களை நீங்கள் சர்ச் செய்து சுற்றிப்பார்க்க அருமையான சேவையை கூகிள் வழங்குகிறது.

1 thought on “உபயோகம் உள்ள இணையதளங்கள் பகுதி-3 | useful websites part-3| Tamil |”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *